CRIME
நண்பன் செய்த துரோகம்..! வீட்டிற்குப் பின்புறம் கிடந்த மர்ம மூட்டை… பிரித்துப் பார்த்த போலீசுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!
பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தின் பதௌனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனது மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற நண்பனை இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விகாஸ் குமார் யாதவ் என்பவரை அவரது நெருங்கிய நண்பரான மனிஷ் சௌபால் வேலை இருப்பதாகக் கூறி வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் விகாஸ் வீடு திரும்பாத நிலையில், மனிஷ் வீட்டின் பின்புறம் உள்ள புதரில் மூட்டையாகக் கட்டப்பட்ட நிலையில் விகாஸின் சடலத்தைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில், வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற விகாஸ் தனது மனைவியிடம் அத்துமீற முயன்றதால் ஆத்திரமடைந்த மனிஷ், தனது தந்தை மற்றும் சித்தப்பாவுடன் சேர்ந்து அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது முக்கிய குற்றவாளியான மனிஷ் கைது செய்யப்பட்டு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது தந்தை மற்றும் சித்தப்பாவைத் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
