பெரும் சோகம்..! மக்களுக்காக வாழ்ந்த ‘சேவை நாயகி’யின் மூச்சு நின்றது… 32 வயதில் இளம் மருத்துவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் சோகம்..! மக்களுக்காக வாழ்ந்த ‘சேவை நாயகி’யின் மூச்சு நின்றது… 32 வயதில் இளம் மருத்துவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

சேவை நாயகி’ என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட 32 வயதான இளம் மருத்துவர் லாவண்யாவின் திடீர் மரணம் ஆந்திர மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களுக்காக இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, தன்னை முழுமையாக மக்கள் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் மருத்துவர் லாவண்யா.

கடந்த ஆண்டு ‘மயஸ்தீனியா கிராவிஸ்’ (Myasthenia Gravis) என்ற அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது பேசும் திறனை இழந்தார். இருப்பினும், தனது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களுக்குச் சேவையாற்றி வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மற்றும் மருத்துவ வட்டாரத்தினர் மத்தியில் ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in