CRIME
அந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு..? தாய் தற்கொ**.. காலடியில் விடிய விடிய கதறி அழுத குழந்தை.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அடோனி பகுதியில், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 25 வயது இளம்பெண் சுவாதி என்பவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது தாய் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுவாதி தற்கொலை செய்துகொண்ட போது, வீட்டில் அவருடைய 3 வயது மகன் ஸ்ரீயன் மட்டுமே இருந்துள்ளான். தாய் தூக்கில் தொங்குவதைக் கண்ட அந்த பச்சிளம் குழந்தை, நிலைமை புரியாமல் தாயின் கால்களைக் கட்டியணைத்துக் கொண்டு இரவு முழுவதும் கதறி அழுதுள்ளது.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், பசி மற்றும் சோர்வு காரணமாக குழந்தை திடீரென மயங்கி விழுந்தது. இதைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
