ஞாபக மறதியா? இல்லை நாடகமா..? துரை தயாநிதி விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஞாபக மறதியா? இல்லை நாடகமா..? துரை தயாநிதி விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

Published

on

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மீண்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் உடல் மற்றும் மனநிலை பரிசோதனை செய்ய மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான மாபெரும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் 3-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள துரை தயாநிதி, பக்கவாதம் மற்றும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவரால் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் உடல் நிலையில் இல்லை என்றும் அவரது தரப்பில் ஏற்கனவே மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

ஆனால், துரை தயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியைக் நேரில் பார்த்ததாகவும், அண்மையில் நடந்த தேர்தலில் நேராகச் சென்று வாக்களித்ததாகவும் கூறி சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் திடுக்கிடும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், அவரது உடல்நிலை குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிய மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்தக் கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், துரை தயாநிதிக்கு விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in