LATEST NEWS
“டவர் இல்லாததால் தான் நான் எம்.எல்.ஏ ஆனேன்..!” நடுச்சபையில் கமெண்ட் அடித்தவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த மரண மாஸ் கவுண்டர்.. கோட்டையே ஸ்தம்பித்த கலகலப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், வால்பாறை தொகுதி திமுக எம்.எல்.ஏ குட்டி என்கிற சுதாகர் செல்போன் டவர் இல்லாதது குறித்துப் பேசிய சுவாரசியமான நகைச்சுவை உரை குறித்து அரசியல் வட்டாரத்தில் மாபெரும் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. “வால்பாறையில் 40 எஸ்டேட்களில் செல்போன் டவர் இல்லை” என்று சுதாகர் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவைக்குள் இருந்த சில உறுப்பினர்கள் குறுக்கிட்டு நகைச்சுவையாகக் கமெண்ட் அடித்துள்ளனர். அதற்குச் சற்றும் யோசிக்காமல் அசாத்திய சாதுரியத்துடன் மாஸ் கவுண்டர் கொடுத்த சுதாகர், “டவர் இல்லாததால் தான் நான் எம்.எல்.ஏ ஆனேன். ஒருவேளை டவர் இருந்திருந்தால் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் வந்திருக்கும், மக்கள் அதற்குள் மூழ்கியிருப்பார்கள்” எனப் பதிலளித்து ஒட்டுமொத்தச் சட்டமன்றத்தையும் சிரிப்பலைகளில் மூழ்கடித்துள்ளார்.
