“பிணத்திலிருந்தே நகையைத் திருடிய உலகத்தில் இப்படியொரு மனிதரா..?!” ஆற்றில் மிதந்து வந்த பீரோவிற்குள் இருந்த தங்கம்.. மீட்டெடுத்த நபர் செய்த உன்னதக் காரியம்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பிணத்திலிருந்தே நகையைத் திருடிய உலகத்தில் இப்படியொரு மனிதரா..?!” ஆற்றில் மிதந்து வந்த பீரோவிற்குள் இருந்த தங்கம்.. மீட்டெடுத்த நபர் செய்த உன்னதக் காரியம்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பேரழிவின் போது, உயிரிழந்தவர்களின் உடல்களிலிருந்து சிலர் நகைகளைத் திருடி மனிதநேயத்தை அவமதித்த கொடூரங்களுக்கு மத்தியில், ஆற்றில் மிதந்து வந்த பீரோவில் இருந்த தங்க நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முயலும் ஒரு உன்னத மனிதரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த்ரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மிதந்து வந்த ஒரு பீரோவை மீட்டெடுத்த அந்த நபர், அதனைத் திறந்து பார்த்தபோது அதற்குள் ஏராளமான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கப் பணம் இருப்பதைக் கண்டுள்ளார். அவற்றுடன் ஜெய் ஸ்ரீ மகாலக்ஷ்மி தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடையின் திகாரப்பூர்வ பில் ஒன்றும் இருந்துள்ளது.

https://twitter.com/RadharamnDas/status/2093217918037422504/video/1

Advertisement

அந்தப் பொருட்களின் உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தில், அந்த மனிதநேயமிக்க நபர் தற்போது நேபாள காவல்துறையை அணுகி விவரங்களைப் பகிர்ந்துள்ளார். “த்ரிசூலி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பீரோவிற்குள் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் கிடைத்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் உடனே நேபாள போலீஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளவும் என்று அவர் விடுத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இழந்தவர்களுக்கு இந்த நகைகளும் இதர மதிப்புமிக்கப் பொருட்களும் பாதுகாப்பாகச் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக நெட்டிசன்கள் பலரும் இப்பதிவை இணையத்தில் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in