“அய்யோ நெஞ்சமே வெடிச்சிடும்..” பைக்கில் அதிவேகமாக வந்த 16 வயது சிறுவன்.. நொடியில் முதியவருக்கு நேர்ந்த கொடூர கதி.. பதைபதைக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அய்யோ நெஞ்சமே வெடிச்சிடும்..” பைக்கில் அதிவேகமாக வந்த 16 வயது சிறுவன்.. நொடியில் முதியவருக்கு நேர்ந்த கொடூர கதி.. பதைபதைக்கும் வீடியோ..!!

Published

on

தமிழ்நாட்டில் 16 வயது சிறுவன் ஒருவன் அதிவேகமாக பைக் ஓட்டிச் சென்று, சாலையில் சென்ற முதியவர் மீது மோதி கொடூர விபத்தை ஏற்படுத்திய பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அந்தச் சிறுவன் மோதிய வேகத்தில், பாதிக்கப்பட்ட நபர் தூக்கி வீசப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோர்கள் தங்களின் மைனர் குழந்தைகளுக்கு வாகனங்களின் சாவியைக் கொடுப்பதற்கு முன், ஒருமுறை இந்த விபத்து வீடியோவை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் இந்தத் தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 18 வயது பூர்த்தியடையாத சிறார்கள் பொதுச் சாலையில் கார் அல்லது பைக் ஓட்டினால், அதற்குப் பொறுப்பான பெற்றோர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும், அந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் 1 ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 25 வயது ஆகும் வரை ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படாது. இத்தனை கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், பெற்றோர்களின் அஜாக்கிரதையால் ஒருவரின் உயிர் இன்று ஊசலாடிக் கொண்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in