” வாவ்.. இப்படியொரு பூல் பார்ட்டிய பாத்திருக்கவே மாட்டீங்க..!” குளத்தில் குதித்து அட்டகாசம் செய்த குட்டிகள்.. தாய் புலி செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

” வாவ்.. இப்படியொரு பூல் பார்ட்டிய பாத்திருக்கவே மாட்டீங்க..!” குளத்தில் குதித்து அட்டகாசம் செய்த குட்டிகள்.. தாய் புலி செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில், பெண் புலி ஒன்று தனது குட்டிகளுடன் பூல் பார்ட்டி கொண்டாடும் அழகான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க புலிக்குட்டிகள் தண்ணீருக்குள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. அப்போது அவற்றின் தாயான பெண் புலி, Z+ பாதுகாப்பு கொடுப்பது போல கரையில் அமர்ந்து தனது கூர்மையான கண்களால் குட்டிகளை எவ்வித ஆபத்தும் வராமல் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

வனவிலங்கு ஆர்வலர்களையும் இணையவாசிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்த வீடியோ, காடுகளில் விலங்குகளின் குடும்பப் பாசத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. சந்திரப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தடோபா-அந்தாரி காப்பகம் மகாராஷ்டிராவின் பழமையான மற்றும் மிகப்பெரிய புலிகள் காப்பகமாகும். இது சுமார் 625 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளதோடு, இங்கு தற்போது 90 முதல் 115 புலிகள் வரை வாழ்ந்து வருகின்றன. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் “இது நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பூல் பார்ட்டி” என்றும், “இயற்கையின் அற்புதமான காட்சி” என்றும் வியந்து பாராட்டி கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in