LATEST NEWS
அரிவாள் வெட்டு, மின்வெட்டு.. அவங்க பாஷையிலேயே சொல்லணும்னா… தவெக ஆட்சியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மு.க.ஸ்டாலின்..!!
திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க.வினரின் பேச்சு பாணியைக் குறிப்பிட்டு சாடிய அவர், தற்போதைய த.வெ.க. ஆட்சியில் இரண்டே இரண்டு விஷயங்களுக்கு நடுவில்தான் கடுமையான போட்டியே நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதில் ஒன்று மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு என்றும், மற்றொன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அரங்கேறி வரும் அரிவாள் வெட்டு என்றும் அவர் எள்ளலாகத் தாக்கியுள்ளார். த.வெ.க.வின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழக மக்கள் மின்சாரத் தட்டுப்பாட்டினாலும், தொடர் குற்றச் சம்பவங்களினாலும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருவதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
