LATEST NEWS
“முதலமைச்சர் மாதிரி காவல்துறையும் ஓய்வுல இருக்கா..?” 24 மணிநேரத்தில் 8 கொலைகள்.. தமிழக அரசை வெளுத்து வாங்கிய கனிமொழி எம்.பி…!!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்று கனிமொழி எம்.பி. கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் குற்றங்களின் விகிதத்தை உயர்த்தி தமிழக அரசு தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பதாகக் சாடியுள்ளார். மேலும், மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகக் காவல்துறை செயல்படுகிறதா அல்லது முதலமைச்சரைப் போல் ஓய்வில் இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் தொடரும் கொலைகளைத் தடுக்கத் தவறிய அரசு, அதற்கு நீதி கேட்டுப் போராடும் பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கி, கைது செய்வதையே முழுநேர வேலையாக வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நேற்றைய தினம் மதுரையில் மாணவர் தமிழ்ச்செல்வன் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும், இன்று சிவகங்கையில் இரட்டைக் கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டுப் போராடியவர்கள் மீதும் காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தி, கைது செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றவாளிகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களையே ஒடுக்கும் இந்தத் திறனற்ற அரசுக்குத் தனது கடுமையான கண்டனத்தை அவர் பதிவு செய்துள்ளார்
