மெடிக்கல் மிராக்கிள்..! டாக்டர்களையே மிரள வைத்த ‘பாகுபலி’ பேபி.. 3.5 கிலோ தாண்டினாலே சிசேரியன் தான்… ஆனால் பெண்ணிற்கு பிரசவ அறையில் நடந்த ‘அந்த’ அற்புதம்.. மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மெடிக்கல் மிராக்கிள்..! டாக்டர்களையே மிரள வைத்த ‘பாகுபலி’ பேபி.. 3.5 கிலோ தாண்டினாலே சிசேரியன் தான்… ஆனால் பெண்ணிற்கு பிரசவ அறையில் நடந்த ‘அந்த’ அற்புதம்.. மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி நகர அரசு மருத்துவமனையில், அனிதா என்ற கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே செய்ய முடியும் என்ற மருத்துவ விதியை முறியடித்து, 4.615 கிலோ கிராம் எடையில் ஓர் ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்த அற்புதம் நிகழ்ந்துள்ளது. சீதாராம்புரத்தைச் சேர்ந்த அனிதாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரைச் சிறப்புப் பிரிவில் அனுமதித்து இந்த விறுவிறுப்பான பாசப் போராட்டப் பிரசவத்தை வெற்றிகரமாகப் பார்த்துள்ளனர்.

வழக்கமான எடையை விட மிக பிரம்மாண்டமாகப் பிறந்த இக்குழந்தையின் எடையைக் கண்டு பிரமித்துப் போன மருத்துவக் குழுவினர், குழந்தைக்குப் ‘பாலபீமன்’ எனப் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். துனி அரசு மருத்துவமனையின் நீண்ட கால வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன் ஒரு பச்சிளம் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in