LATEST NEWS
விபத்தில் வந்த ஆட்சி; 5 ஆண்டுகள் நீடிக்காது… தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி தவெக மீது கடும் தாக்கு..!!
தருமபுரியில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது . இதனைச் சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்த அவர், “தவெக ஆட்சியின் லட்சணம் இதுதான்; தமிழகம் தற்போது இருண்டுவிட்டது” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், எந்தவொரு கொள்கையும் இன்றி ஏதோ ஒரு விபத்தில் தவெக ஆட்சிக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார் . தமிழக வெற்றி கழகத்தின் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருக்கப்போவது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறினார் . இத்தகைய சூழலில் தற்போதைய அரசியல் நகர்வுகள் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன .
மேலும், தவெக அரசு தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தின் பொருளாதார நிலை மோசமடையும் என எச்சரித்தார். தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்தால், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.10 லட்சம் கோடியிலிருந்து ரூ.20 லட்சம் கோடியாக உயர்ந்துவிடும் என்று நிதி நிர்வாகக் குறைபாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்
