POLITICS
“மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா..?” 6,000 தொண்டர்கள் உழைப்பு என்ன ஆகுறது..? பதவி விலகிய எம்.எல்.ஏ-க்களால் கலங்கிய எடப்பாடி பழனிசாமி…!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக் கட்சிக்குச் சென்றது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றப் பேரவையில் தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளரை வெற்றி பெற வைக்கக் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட சுமார் 6,000 பேர் இரவு பகலாகக் களத்தில் நின்று உழைக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களின் உழைப்பால் வெற்றிபெற்ற பிரதிநிதி, பதவியைப் பெற்ற பிறகு சுயநலத்திற்காக வேறு கட்சிக்கு மாறும்போது, அவருக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களின் மனம் எந்த அளவிற்குப் புண்படும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். இந்த மாற்றுக்கட்சித் தாவல் அரசியல், உண்மையாக உழைக்கும் தொண்டர்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயல் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, “திமுகவும் அதிமுகவும் சேர்ந்துவிட்டீர்கள்” என்று விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத்தினரை அவர் கடுமையாகச் சாடினார். ஜனநாயகப் பண்புகளையும் தொண்டர்களின் தியாகத்தையும் மதிக்காமல், அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளாமல் தவெகவினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக எடப்பாடி பழனிசாமி தனது பேச்சில் விமர்சித்தார்.
