“விஜய் மாமா நீங்க தான் எங்களை படிக்க வைக்கணும்” அடுத்தடுத்து பறிபோன பெற்றோர் உயிர்… கன்னியாகுமரி சிறுமிகளின் கண்ணீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் மாமா நீங்க தான் எங்களை படிக்க வைக்கணும்” அடுத்தடுத்து பறிபோன பெற்றோர் உயிர்… கன்னியாகுமரி சிறுமிகளின் கண்ணீர் வீடியோ..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் சத்யா தம்பதியரின் மகள்களான பிரியதர்ஷினி (12-ம் வகுப்பு), ஸ்வேதா ஸ்ரீ (10-ம் வகுப்பு) ஆகிய இரு சிறுமிகள், தங்களது பெற்றோரை அடுத்தடுத்து இழந்து தவித்து வருகின்றனர். தந்தை சரவணன் நிமோனியா தொற்றால் உயிரிழந்த நிலையில், குடும்பத்தை வழிநடத்திய தாய் சத்யாவும் மார்பகப் புற்றுநோய் பாதிப்பால் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது இந்த இரு பெண் குழந்தைகளும் தங்களது வயதான பாட்டியின் பராமரிப்பில் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிப்பது வாடகை வீடு என்பதால், வாடகை கூட செலுத்த முடியாமல், ஏற்கனவே அட்வான்ஸாகக் கொடுத்த தொகையையே வீட்டு உரிமையாளர் மாத வாடகையாகக் கழித்து வருகிறார். பாட்டிக்குக் கிடைக்கும் அரசின் 1,000 ரூபாய் உதவித்தொகையை மட்டுமே நம்பி இந்த ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்வாதாரமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

Advertisement

சொந்த வீடு இல்லாத சூழலிலும், பெற்றோரை இழந்த கடுமையான மன வேதனையிலும் இந்த இரு சிறுமிகளும் தங்களது வீட்டு வேலைகளைத் தாங்களே கவனித்துக் கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். எனினும், தங்களது எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த பயம் அவர்களைச் சூழ்ந்துள்ளதால் தங்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரும் உதவி தேவைப்படும் இக்கட்டான நிலையில் அச்சிறுமிகள் உள்ளனர்.

இந்நிலையில், தங்களது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து உயர்கல்வி கற்கவும், பாதுகாப்பாக வாழ ஒரு சொந்த வீடு கிடைக்கவும் உதவக் கோரி அச்சிறுமிகள் தமிழக முதலமைச்சருக்குக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். “விஜய் மாமா நீங்க தான் எங்களை படிக்க வைக்கணும், எங்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கொடுக்கணும்” என்று முதலமைச்சர் விஜய்யை நோக்கி அச்சிறுமிகள் விடுத்துள்ள உருக்கமான வீடியோ கோரிக்கை தற்பொழுது இணையத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in