LATEST NEWS
“அய்யோ நெஞ்சே பதறுது..” ஒரே மோட்டார் அறை கூரையில் 3 சிறுத்தைகள் நள்ளிரவில் காரில் சென்றவர்களுக்கு காத்திருந்த மரண பயம்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!1
உத்தரப் பிரதேச மாநிலம் முரதாபாத் மாவட்டத்தின் காந்த் மற்றும் தாகூர்த்வாரா பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கரும்புத் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் சிறுத்தைகள் மனித குடியிருப்புகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளன. இதனால் இப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, காந்த்க்குட்பட்ட சிக்கந்தராபாத் கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு ஆழ்துளைக் கிணறு மோட்டார் அறையின் கூரையின் மீது ஒரே நேரத்தில் மூன்று சிறுத்தைகள் அமர்ந்திருந்த விசித்திரமான காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் அந்த வழியாக காரில் சென்ற கிராம மக்கள் சிலர் இந்த காட்சியைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து வனத்துறையினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
https://www.instagram.com/reel/Dd1b9q2B6mG/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து காந்த் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வனத்துறை சார்பில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் சிறுத்தைகள் தாக்கியதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சிறுத்தைகளைப் பிடிக்க வனத்துறையினர் 41 இடங்களில் கூண்டுகளை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போதைக்கு காந்த் மற்றும் தாகூர்த்வாரா பகுதிகளில் இருந்து இரண்டு சிறுத்தைகள் கூண்டில் சிக்கியுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் தனியாகவோ அல்லது இரவு நேரங்களிலோ விவசாயத் தோட்டங்களுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
