“உழைப்புக்கு இதுதான் பரிசா?” பதவி பறிபோன 10 மாவட்ட செயலாளர்கள்… தவெகவில் இரு பிரிவு.. அமைச்சர் ஆனந்திடம் கண்ணீர் கோரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உழைப்புக்கு இதுதான் பரிசா?” பதவி பறிபோன 10 மாவட்ட செயலாளர்கள்… தவெகவில் இரு பிரிவு.. அமைச்சர் ஆனந்திடம் கண்ணீர் கோரிக்கை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுகவிலிருந்து விலகி இணைந்த நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் மற்றும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறி, கட்சியின் உள்ளூர் மட்டங்களில் கடும் அதிருப்தியும் உட்கட்சிப் பூசல்களும் வெடித்துள்ளன. ஏற்கனவே கடலூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படுவதாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது இந்த மோதல் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ சத்யபாமா வசம் இருந்த நிலையில், தற்போது அந்தத் தொகுதியின் கட்சிப் பொறுப்புகள் அண்மையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வசம் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் இத்தகைய திடீர் மாற்றங்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகள் மாற்றுக்கட்சியினருக்கு வாரி வழங்கப்படுவது, ஆரம்ப காலத்திலிருந்தே விஜய்க்காக உழைத்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

குறிப்பாக, விஜய் ரசிகர் மன்றக் காலகட்டத்திலிருந்து பல ஆண்டுகளாகக் களப்பணியாற்றி, தவெகவின் மாவட்டச் செயலாளர் அந்தஸ்திற்கு உயர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களின் பதவிகளை இழந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தப் பழைய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் தற்போதைய தவெக முக்கிய நிர்வாகியுமான ஆனந்தனிடம் நேரில் சென்று, தங்களுக்கு நேர்ந்த அரசியல் புறக்கணிப்புகளைக் கூறி கண்ணீர் வடித்து முறையிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in