LATEST NEWS
“5 முறை முஸ்லிம் தீவிரவாதினு சொன்னீங்க…” சட்டசபையில் வெடித்த தவெக – திமுக மோதல்… திமுகவின் முகத்திரையை கிழித்த எம்.எல்.ஏ முன்ஸ்தபா..!!
தவெக சட்டமன்ற உறுப்பினர் முன்ஸ்தபா சட்டப்பேரவையில் பேசிய பேச்சு ஆளுங்கட்சியான திமுகவினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் 13 பேருக்குப் போட்டியிடத் தவெக தலைவர் விஜய் வாய்ப்புக் கொடுத்தார் என்றும், ஆனால் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என்று திமுகவினர் தங்களை வீணாகக் கூறிக்கொள்வதாகவும் அவர் அவையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுகவினர் தங்களைச் சிறுபான்மையினரின் காவலராகக் காட்டிக்கொண்டே, மறுபுறம் தவெகவைச் சேர்ந்தவர்களை 5 முறை முஸ்லிம் தீவிரவாதிகள் எனப் பேசியுள்ளதாகத் தவெக எம்.எல்.ஏ முன்ஸ்தபா பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இவரின் இந்த அடுக்கடுக்கான புகார்களைக் கேட்டு ஆத்திரமடைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அவையில் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததால், பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பும் வாக்குவாதமும் நிலவியது.
