“ஐயோ கடவுளே..! ரூமுக்குள் தொங்கிய 5 சடலங்கள்..!” ஜன்னல் வழியே பார்த்த ஊழியர்களுக்குக் காத்திருந்த மரண ஷாக்.. ஆட்டோவில் வந்து விபரீத முடிவு எடுத்த ஒரே குடும்பம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே..! ரூமுக்குள் தொங்கிய 5 சடலங்கள்..!” ஜன்னல் வழியே பார்த்த ஊழியர்களுக்குக் காத்திருந்த மரண ஷாக்.. ஆட்டோவில் வந்து விபரீத முடிவு எடுத்த ஒரே குடும்பம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பலபு சுதாகர் (36), அவரது மூன்று சகோதரிகள் மற்றும் 15 வயது மருமகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவர்களைப் பிரிந்த இரு மூத்த சகோதரிகள் உட்பட 5 பேரும் சுதாகரின் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தொடர் வறுமையால் விரக்தியடைந்து தங்களது ஆட்டோவிலேயே நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் நகருக்கு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியவர்கள், மன உளைச்சலின் உச்சத்தில் கூட்டுத் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

ஹோட்டல் அறை பல மணி நேரமாகத் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்ததால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது 5 பேரும் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமைக்கும் நோய் பாதிப்பிற்கும் பயந்து 15 வயதுப் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்தத் துயரச் சம்பவம் ஆந்திரா மற்றும் தமிழக எல்லைப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in