LATEST NEWS
“வேணும்னா வாட்டர் ஏர்போர்ட் கட்டி மிதந்து போகலாம்” பரந்தூர்ல ஏர்போர்ட் வந்தால் சென்னை வெள்ளத்தில் மூழ்கிவிடும்… ஏன் தெரியுமா..? உண்மையை புட்டு புட்டு வைத்த அமைச்சர் ராஜ்மோகன்…!!
“வேண்டுமானால் வாட்டர் ஏர்போர்ட் அமைத்துக் கொள்ளலாம்…” என்று பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். பரந்தூர் பகுதியில் உள்ள இயற்கை நீர்நிலைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கால்வாய்களைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பரந்தூரில் ஆயிரம் ஆண்டு காலப் பழமையான கம்பன் கால்வாய் என்னும் வரலாற்றுப் பொக்கிஷம் ஓடிக்கொண்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார். மனிதர்களால் மீண்டும் உருவாக்க முடியாத இத்தகைய நீர் வழித்தடங்களைக் கொண்ட பரந்தூர் பகுதி, அடிப்படையில் ஒரு உறிஞ்சு நிலம் என்றும், இதுதான் பெருமழைக் காலங்களில் சென்னைக்கு வெள்ளம் வருவதைத் தடுக்கக்கூடிய இயற்கையான அரணாகச் செயல்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
அப்படிப்பட்ட உறிஞ்சு நிலத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மற்றொரு சென்னை வெள்ளப் பேரழிவைத் தாங்கும் சக்தி தலைநகரத்திற்கு இருக்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார். எனவே, பரந்தூரில் பசுமை வழி விமான நிலையம் எல்லாம் அமைக்க முடியாது என்றும், அடம் பிடித்து அங்கு ஏர்போர்ட் கட்ட நினைத்தால் வேண்டுமானால் தண்ணீரில் மிதக்கும் வாட்டர் ஏர்போர்ட் அமைத்து மிதந்து செல்லலாம் என்றும் அவர் மிகக் காட்டமாகச் சாடினார்.
