LATEST NEWS
“அப்படியே யூ-டர்ன் அடிச்சிட்டாங்க…” 8 வழிச் சாலைக்கு ஒரு பேச்சு.. பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு ஒரு பேச்சா..? திமுகவின் இரட்டை வேடத்தை சட்டசபையிலேயே கிழித்தெறிந்த சி.வி.சண்முகம்..!!
தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக செயல்படுவதாக அதிமுக எம்.எல்.ஏ சி.வி. சண்முகம் சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முதலீடுகள் வராததற்கு ஆளுங்கட்சியின் சுயநல அரசியலே முக்கியக் காரணம் என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை, இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி திமுகவினர் தீவிரமாக எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள் என்று சி.வி. சண்முகம் நினைவு கூர்ந்தார். ஆனால், அதே திமுகவினர் தற்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டம் கண்டிப்பாக வந்தே தீர வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதாக அவர் சாடினார்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலப்பாட்டையும், ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றவுடன் அதற்கு நேர்மாறான மற்றொரு நிலப்பாட்டையும் எடுப்பதாக அவர் அவையில் கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளின் நலனில் திமுகவிற்கு இரட்டை வேடம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவரது இந்த உரை சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
