காங்கிரஸ், அதிமுக, தேமுதிக அங்கிருந்து திமுக… எம்.எல்.ஏ ஆஸ்டினின் ஹிஸ்டரியை கிழித்த அதிமுக தளவாய் சுந்தரம்.. கோபத்தில் பூண்டி கலைவாணன் செய்த செயல்.. திடீர் மோதலால் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காங்கிரஸ், அதிமுக, தேமுதிக அங்கிருந்து திமுக… எம்.எல்.ஏ ஆஸ்டினின் ஹிஸ்டரியை கிழித்த அதிமுக தளவாய் சுந்தரம்.. கோபத்தில் பூண்டி கலைவாணன் செய்த செயல்.. திடீர் மோதலால் பரபரப்பு..!!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆஸ்டினின் அரசியல் பயணம் குறித்து அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் பேசிய பேச்சு, அவையில் ஆளுங்கட்சியினரிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உறுப்பினர் ஆஸ்டின் முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் என்றும், அதன்பிறகு அதிமுகவிற்கு வந்து 6 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் என்றும், பின்னர் தேமுதிகவிற்குச் சென்றுவிட்டு தற்போது திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றும் அவரது அரசியல் கட்சித் தாவல்களைத் தளவாய் சுந்தரம் அவையில் பட்டியலிட்டார்.

அதிமுக உறுப்பினரின் இந்தத் தனிநபர் விமர்சனத்தைக் கேட்டு ஆளுங்கட்சி வரிசையில் இருந்த திமுகவினர் கடும் ஆத்திரமடைந்தனர். குறிப்பாக, திருவாரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தளவாய் சுந்தரத்தின் பேச்சால் சட்டெனத் தனது இருக்கையை விட்டு எழுந்து, ஆக்ரோஷமாகக் கோபத்துடன் அவரை நோக்கிப் பாய்ந்து செல்ல முயன்றதால் பேரவையில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

Advertisement

இருதரப்பு உறுப்பினர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதைத் தொடர்ந்து, அவையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சபாநாயகர் தீவிர முயற்சி மேற்கொண்டார். சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கிடையே அரங்கேறிய இந்தத் திடீர் மோதல் மற்றும் தள்ளுமுள்ளு முயற்சி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in