LATEST NEWS
ஸ்டாலின் சிறை சென்றது ஏன்..? மிசா காரணம் அல்ல.. இந்திராகாந்தியை அவதூறாக பேசியதால் தான்… பேரவையில் கொந்தளித்த அமைச்சர் நிர்மல்குமார்..!!
தமிழக சட்டமன்றத்தில் தவெக அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல் குமார், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மிசா சிறைவாசம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசியுள்ளார். அவையில் பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமோ அல்லது குறிப்போ அவையிலோ, வெளியிலோ இல்லை” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அமைச்சர் நிர்மல் குமார் தனது பேச்சில், “அன்றைய காலகட்டத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ’21-வது அம்சம் திட்டம்’ குறித்து ஸ்டாலின் மிகவும் அவதூறாகவும் மோசமாகவும் பேசிய காரணத்திற்காகத் தான் அவர் கைது செய்யப்பட்டார்” என்று புதிய குண்டைக் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், பெண்கள் தொடர்பான வழக்குகளின் அடிப்படையிலேயே அவர் சிறை சென்றார் என்றும், அதை விடுத்து மிசா கைதி என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த அதிரடியான குற்றச்சாட்டு மற்றும் அநாகரிகமான விமர்சனத்திற்குச் சட்டமன்றத்தில் இருந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர எழுந்து தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இதனால் தவெக – திமுக உறுப்பினர்களிடையே அவையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டப்பேரவை வளாகமே பெரும் அமளியாக மாறியது.
