CRIME
உச்சகட்ட கொடூரம்..! மிதிவண்டியிலிருந்து தள்ளிவிட்டு 19 வயது மருத்துவ மாணவிக்கு நேர்ந்த நரகக் கொடுமை.. காமக்கொடூரனின் வெறிச்செயல்.. நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்..!!
ஜெர்மனியைச் சேர்ந்த 19 வயதான மருத்துவ மாணவி மரியா லாண்டன்பர்கர், அங்குள்ள ஒரு பூங்காவிற்குச் சென்றிருந்த போது, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உசேன் காவரி என்ற புலம்பெயர்ந்த நபரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். அந்த நபர் மரியாவைத் துரத்திச் சென்று, அவரது மிதிவண்டியிலிருந்து கீழே தள்ளி, கழுத்தை நெரித்துத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், சுயநினைவற்ற நிலையில் அவரை ஆற்றங்கரையில் அப்படியே போட்டுவிட்டுத் தப்பியோடியதால், மரியா ஆற்று நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய ஜெர்மனி காவல்துறையினர், டிஎன்ஏ ஆதாரங்கள் மூலம் கொலையாளி உசேன் காவரியைக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையின் முடிவில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர் ஜெர்மனிக்கு வருவதற்கு முன்பே கிரீஸ் நாட்டில் மற்றொரு இளம் பெண்ணைக் கொள்ளையடிக்கவும், கொலை செய்யவும் முயன்ற குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்தவர் என்ற திடுக்கிடும் உண்மையும் அம்பலமானது. இந்த விபரீதச் சம்பவம் ஜெர்மனியில் பெண்களின் பாதுகாப்பு குறித்த மாபெரும் விவாதத்தையும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
