CRIME
“ஒரே காரில் 3 அரக்கர்கள்..!” இளம்பெண்ணுக்கு நடந்த மாபெரும் கொடுமை… சாலையில் தூக்கி வீசிய மிருகங்கள்… அந்த ஒரு CCTV காட்சி… . பதறவைக்கும் பின்னணி..!!
லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவியான மேடிசன் புரூக்ஸ், 2023-ஆம் ஆண்டு காரில் வைத்து மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்டு விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபான விடுதியில் அறிமுகமான டெஸ்மண்ட் கார்ட்டர், கைவோன் வாஷிங்டன் மற்றும் கேசன் கார்வர் ஆகிய மூவரும் அதிக மதுபோதையில் இருந்த புரூக்ஸை காரில் வைத்து பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கியுள்ளனர். பின்னர் நெடுஞ்சாலையில் தள்ளிவிடப்பட்ட புரூக்ஸ், போதையில் தடுமாறிச் சென்றபோது வேகமாக வந்த கார் மோதி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் முதன்மை குற்றவாளியான டெஸ்மண்ட் கார்ட்டரின் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 17 அன்று தொடங்க உள்ளது.
வழக்கு விசாரணையின் போது, புரூக்ஸ் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதாகக் குற்றவாளிகள் தரப்பு வாதிட்ட போதிலும், புரூக்ஸின் ரத்தத்தில் சட்டப்பூர்வ வரம்பை விட 4 மடங்கு அதிகமாக ஆல்கஹால் இருந்ததுடன், அவர் தடுமாறிச் செல்லும் CCTV காட்சிகளும் வெளிவந்துள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் காயங்கள் குறித்துக் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் எழுப்பிய சர்ச்சைக்குரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதில் தொடர்புடைய கைவோன் வாஷிங்டன் என்பவர், அதே மதுபான விடுதியில் வேறொரு பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். உயிரிழந்த புரூக்ஸிற்கு நீதி கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் இளஞ்சிவப்பு நிற ஆடை அணிந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
