ச்சே..! கண்முன்னே நடந்த கொடூரம்… ஒருத்தர் கூட காப்பாத்த வரல… பேருந்து நிலையத்தில் பெண்ணை கதற கதற கொன்ற கொடூரன்… குஜராத்தையே உலுக்கிய பகீர் சிசிடிவி வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

ச்சே..! கண்முன்னே நடந்த கொடூரம்… ஒருத்தர் கூட காப்பாத்த வரல… பேருந்து நிலையத்தில் பெண்ணை கதற கதற கொன்ற கொடூரன்… குஜராத்தையே உலுக்கிய பகீர் சிசிடிவி வீடியோ..!!

Published

on

குஜராத்தின் பாவ்நகர் எஸ்.டி. பேருந்து நிலையப் பகுதியில், காஜல் பரையா என்ற இளம் பெண் தனது லிவ்-இன் துணையான ஃபைசல் கான் என்பவரால் பகிரங்கமாகத் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜல் தனது சகோதரருடன் பேருந்து முனையத்தில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த ஃபைசல், காஜலைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். தாக்குதலின் தீவிரத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த காஜலின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மிதித்தும், தலையில் எட்டி உதைத்தும் ஃபைசல் தொடர்ந்து தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற காஜலின் சகோதரரும் ஃபைசலால் கடுமையாகத் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இந்தக் கொடூரமான தாக்குதல் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் நடந்தபோதிலும், அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அந்தப் பெண்ணையோ அல்லது அவரது சகோதரரையோ காப்பாற்ற முன்வரவில்லை. தாக்குதலின் போது பொதுமக்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டே கடந்து சென்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. ஃபைசல், காஜலின் சகோதரரைத் துரத்திச் சென்று பிடித்து வந்து மீண்டும் தாக்கிய இடைவெளியில் கூட, நிலைகுலைந்து கிடந்த காஜலுக்கு உதவ யாரும் வரவில்லை. சரியான நேரத்தில் யாராவது தலையிட்டிருந்தால் அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்ற கேள்வியும், பொதுமக்களின் இந்த அமைதியும் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பாக குஜராத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியான ஃபைசலைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஃபைசலைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, குற்றம் எவ்வாறு நடந்தது என்பதை ஆராயும் ‘குற்றக் காட்சி மறுசீரமைப்பு’ சோதனையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது அவரைப் போலீசார் கயிற்றால் கட்டி அழைத்துச் சென்று, லத்தியால் அடித்து அழைத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் குறித்து குஜராத் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in