CRIME
இவளெல்லாம்ஒருதாயா..? தலையணைக்கு அடியில் போதைப்பொருள்.. 8 வயது மகள் மரணத்தில் தாயின் பகீர் வாக்குமூலம்.. அதிர்ந்து போன போலீசார்..!
செப்டம்பர் 23 அன்று, 8 வயதே ஆன மிராக்கிள் பிரையன் என்ற சிறுமி அவரது படுக்கையில் சுயநினைவின்றி மீட்கப்பட்டார். நீதிமன்ற ஆவணங்களின்படி, காவல்துறையினர் சோதனையிட்டபோது அந்தச் சிறுமியின் படுக்கையறையில் உள்ள தலையணைக்கு அடியில் மெத்தம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து சிறுமியின் தாயான காரி பிரையன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை வருவதற்கு முன்னதாக, தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் போதைப்பொருளை அங்கிருந்து மாற்றியதாக அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது மகள் ட்ரை ஷாம்பூவை சுவாசித்திருக்கலாம் அல்லது மாத்திரைகளை விழுங்கியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் மீது குழந்தையைப் பராமரிக்கத் தவறியதால் ஏற்பட்ட மரணம் மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தது உள்ளிட்ட முதற்கட்டக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிறுமியின் அதிகாரப்பூர்வ மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில், மிராக்கிள் பிரையனின் உடன்பிறப்புகள் அவரைப் பற்றி நினைவுகூறுகையில், அவர் எப்போதும் நகைச்சுவையாகவும், அன்பாகவும் இருக்கக்கூடிய ஒரு சிறுமி என்றும், இசை, ராமன் நூடுல்ஸ் மற்றும் கே-பாப் டெமான் ஹண்டர்ஸ் ஆகியவற்றை மிகவும் விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
