நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! பெண்ணின் ஆடையைக் கிழித்து… தலைமுடியை வெட்டி கிராமத்தில் ஊர்வலம் நடத்திய கும்பல்.. பரபரப்பு பின்னணி…!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! பெண்ணின் ஆடையைக் கிழித்து… தலைமுடியை வெட்டி கிராமத்தில் ஊர்வலம் நடத்திய கும்பல்.. பரபரப்பு பின்னணி…!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஆஜ்னா கிராமத்தில், ஒரு பெண்ணை கூட்டமாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மற்றொரு இளைஞருடன் வேலைக்குச் சென்றதால், அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரே இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு கூடியிருந்த கும்பல் அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்டு மரத்தடிகளால் கொடூரமாகத் தாக்கியதோடு, அவரது தலைமுடியையும் வெட்டி அவமானப்படுத்தியுள்ளது. மேலும், அங்கிருந்த சில பெண்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளைக் கிழித்து, அவரை கிராமம் முழுவதும் அரைகுறை ஆடையுடன் வெறுங்காலுடன் நடக்க வைத்துப் பேரணியாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த கொடூர நிகழ்வின் போது கிராம மக்கள் பலரும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனரே தவிர, யாரும் அவரைப் பார்க்க முன்வரவில்லை.

Advertisement

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அர்துனா காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை 7 பேரைத் தடுத்துக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in