CRIME
“நீ எந்த ஜாதிக்காரன்டா..?” சாதி மறுப்பு நட்பால் நேர்ந்த கொடூரம்.? மதுரையில் 11ஆம் வகுப்பு மாணவன் கொடூரக் கொலையின் அதிர்ச்சி பின்னணி..!!உன் ஜாதி என்னடா..?
மதுரை கூடல் நகர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகே உள்ள முட்புதரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பாததால் தேடப்பட்டு வந்த நிலையில், ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியில் நீரில் மிதந்தபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், தமிழ்செல்வன் தனது வீட்டின் அருகே உள்ள வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பாகப் பழகி வந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வனை வழிமறித்துக் கண்டித்ததோடு, அவரது சமூகம் மற்றும் முகவரி குறித்தும் விசாரித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மாணவனின் உடலில் காயங்கள் இருந்ததால், இது சாதி மறுப்பு நட்பின் காரணமாக நடந்த ஆணவப்படுகொலையா என்ற கோணத்தில் கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
