LATEST NEWS
“அவன் எங்க புருஷன் டி” 2 பொண்டாட்டி, 2 குழந்தைகள் இருக்குன்னு தெரிஞ்சும் காதல்… பஸ் டிரைவருடன் ஓடிப்போன கல்லூரி மாணவி.. காவல் நிலையம் முன் திரண்ட மனைவிகள்… பெரும் பரபரப்பு..!!
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமராவதி நகரைச் சேர்ந்த 29 வயது தனியார் பேருந்து ஓட்டுநர் மணிகண்டன், ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில் 19 வயது கல்லூரி மாணவி காவியாவை காதலித்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் தனது முதல் மனைவி தஸ்மின் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மலர் என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து காளிங்கராயன்பாளையத்தில் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, பவானி – ஈரோடு வழித்தடப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றியபோது, அந்தப் பேருந்தில் தினமும் கல்லூரிக்குச் சென்ற இரண்டாம் ஆண்டு மாணவி காவியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மணிகண்டனுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் ஆனது தெரிந்தும் மாணவி அவரை காதலித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குச் சென்ற காவியா வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மணிகண்டனும், மாணவியும் சிக்கியதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்தத் தகவலை அறிந்த மணிகண்டனின் இரண்டு மனைவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பவானி காவல் நிலையம் முன்பு திரண்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராமில் பைக் ஸ்டண்ட் ரீல்ஸ் செய்து வந்த மணிகண்டனின் இந்த அடுத்தடுத்த ஏமாற்று வேலை குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
