அதிர்ச்சி..! பள்ளி சாம்பாரில் சாணி பவுடர் கலந்த சத்துணவு பணியாளர் கணவர்… 51 அரசுப் பள்ளி மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.. நடந்தது என்ன..? ஈரோட்டில் பரபரப்பு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! பள்ளி சாம்பாரில் சாணி பவுடர் கலந்த சத்துணவு பணியாளர் கணவர்… 51 அரசுப் பள்ளி மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.. நடந்தது என்ன..? ஈரோட்டில் பரபரப்பு…!!

Published

on

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபயனூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு சாம்பாரில் சாணி பவுடர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் சத்துணவு பணியாளராக இருந்த பெண் ஒருவர் நிர்வாகக் காரணங்களால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவரான ஆறுமுகம் (48) என்பவர், தனது மனைவியை நீக்கிய ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில், அவர் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சாம்பாரில் சாணி பவுடரைக் கலந்துள்ளார்.

இருப்பினும், அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ உணவு பரிமாறப்படுவதற்கு முன்பாகவே சாம்பாரில் ஏதோ நச்சுப் பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளியில் பயிலும் 51 மாணவர்கள் பெரும் அசம்பாவிதத்தில் இருந்தும், உடல்நல பாதிப்பில் இருந்தும் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த நயவஞ்சகச் செயல் குறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆறுமுகத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in