LATEST NEWS
“உன்னை ஓஹோன்னு ஆக்குறேன்” வீடியோ காலில் நிர்வாண பூஜை… கிளி ஜோசியரை நம்பி அறையில் நிர்வாணமாக நின்ற பெண்… கடைசியில் காத்திருந்த பெரிய ஆப்பு…!!
சென்னை கோடம்பாக்கத்தில் கனடா நாட்டுப் பெண்ணிடம் தோஷம் கழிப்பதாகக் கூறி நிர்வாண பூஜை நடத்தச் செய்து, மிரட்டி பணம் பறித்த கிளி ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 37 வயதுப் பெண், கனடா குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஆவார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வரும் இவர், சென்னையில் தங்கியிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெசன்ட் நகர் கடற்கரையில் திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து என்ற கிளி ஜோசியரைச் சந்தித்து ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது அவர் கூறிய தனிப்பட்ட தகவல்களை நம்பிய அந்தப் பெண், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற வழி கேட்கவே, அதற்கு ஜோசியர் மோசடித் திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
தொலைக்காட்சியில் பெரும் புகழும் பிரபலமும் அடைய வேண்டும் என்றால், தங்கியிருக்கும் அறையிலிருந்து ‘நிர்வாண பூஜை’ செய்ய வேண்டும் என ஜோசியர் இசக்கி முத்து நம்ப வைத்துள்ளார். அதனை நம்பிய அந்தப் பெண், வீடியோ காலில் வந்து தன் அறையிலிருந்து நிர்வாண பூஜையில் ஈடுபட்டுள்ளார். கடற்கரையிலிருந்து அந்த வீடியோ கால் மூலமாகப் பூஜையை நேரடியாகப் பார்த்த ஜோசியர், இதற்காக அந்தப் பெண்ணிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயைக் கட்டணமாகப் பெற்றுள்ளார். ஆனால், அதோடு நிறுத்தாமல் மேலும் பணம் தர வேண்டும் என்று அந்தப் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் வீடியோ காலில் பதிவு செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தைரியமாகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி குற்றாலத்தில் பதுங்கியிருந்த ஜோசியர் இசக்கி முத்துவை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான ஜோசியர் இதுபோன்று வேறு ஏதேனும் பெண்களை ஏமாற்றி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியுள்ளாரா என்ற கோணத்திலும், இந்தத் திட்டமிட்ட மோசடியின் பின்னணி குறித்தும் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
