நாடே பரபரப்பு..! “ஸ்டாலின் தோல்வி திட்டமிடப்பட்ட சதி”… 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால்… அபிஜீத் விதித்த கெடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாடே பரபரப்பு..! “ஸ்டாலின் தோல்வி திட்டமிடப்பட்ட சதி”… 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால்… அபிஜீத் விதித்த கெடு..!!

Published

on

பாஜகவை தீவிரமாக எதிர்த்த மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மம்தா பானர்ஜி போன்ற எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் தோல்வி தற்செயலானது அல்ல, அது திட்டமிடப்பட்ட சதி என்று காக்புரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையை இழந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து வீழ்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர மறுஆய்வு நடவடிக்கையே இந்தத் தோல்விகளுக்குப் பின்னணியில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ள அபிஜீத் திப்கே, அவர் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறினார். இந்த SIR திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 13 கோடிக்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் 48 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

முன்னாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவர் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாகவும் அபிஜீத் திப்கே தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இருப்பினும், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின்படி, கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம், 8,795 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஸ்டாலின் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல டெல்லி மற்றும் மேற்கு வங்கத்திலும் பெருமளவிலான வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாலேயே எதிர்க்கட்சித் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்ற தனது குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in