LATEST NEWS
“ஐயோ கடவுளே.. நடுரோட்டில் தனியாக அழுத 3 வயது குழந்தை..” 6 ஆம் வகுப்பு மாணவி செய்த அந்த காரியம்.. பள்ளி வாசலில் பெற்றோர் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. நெட்டிசன்களை உருக வைத்த சம்பவம்..!!
சீனாவில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், ஒரு நாள் நள்ளிரவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று சாலையோரத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்தக் குழந்தைக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில், அருகிலிருந்த கடைக்குச் சென்று மிட்டாய்களை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர், தனது அடையாளத்தை எங்கும் வெளிப்படுத்தாமல் அந்தக் குழந்தையைப் பத்திரமாக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்துள்ளார்.
இதற்கிடையில், உணவகம் நடத்தி வரும் அந்தக் குழந்தையின் பெற்றோர், வேலை மும்முரத்தில் குழந்தை வெளியேறியதை அறியாமல் தேடி அலைந்து, இறுதியில் காவல் நிலையத்தில் இருந்த குழந்தையைக் கண்டறிந்தனர். தங்களது குழந்தையைக் காப்பாற்றிய அந்தச் சிறுமிக்கு நன்றி கூற விரும்பி, சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது அவர் ஒரு பள்ளி மாணவி என்பது தெரியவந்தது. இதனால் நெகிழ்ந்துபோன பெற்றோர், அந்த மாணவியின் பள்ளிக்கு நேரடியாகச் சென்று பூங்கொத்து, பணமுடிப்பு மற்றும் தங்களது உணவகத்தில் ஆயுள் முழுவதும் இலவசமாக ஸ்டேக் உணவைச் சாப்பிடுவதற்கான விஐபிகார்டு ஆகியவற்றைப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
