LATEST NEWS
ஜெம் வீரமணி வழக்கில் அது மறந்து போச்சா CM Sir..? அதிகாரிகள் உங்கள் காதுகளில் ஓதவில்லையா.? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் காட்டமான கேள்வி..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாய் திறங்க ஸ்டாலின் சார் என அதிக சத்தத்துடன் கத்தினீர்களே? உங்கள் ஸ்கிரிப்ட் பேப்பரை அப்டேட் செய்யாமல் வந்துவிட்டீர்களா?” என்று எதிர்க்கட்சியினரை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், இந்த வழக்கு தொடர்பாக தான் ஏற்கனவே விரிவாகப் பேசிவிட்டதாகவும், நீங்கள்தான் தொலைக்காட்சி செய்திகளையோ அல்லது செய்தித்தாள்களையோ எதையும் பார்க்கவில்லை என்று தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். செய்தித்தாள்களைத் தொடர்ந்து படித்திருந்தால் இந்த உண்மை உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.
இறுதியாக, “இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கக் கூடாது” என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், அந்த நீதிமன்ற உத்தரவைக் கூடவா உங்கள் அதிகாரிகள் உங்கள் காதுகளில் ஓதவில்லையா? என்று மிகவும் காரசாரமாக வினவியுள்ளார்.
