LATEST NEWS
“எல்லாரும் பனையூருக்கு வாங்க” நள்ளிரவில் வெடித்த உள்கட்சி மோதல் – எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் விஜய் அவசர அழைப்பு..!!
தமிழகத்தில் துணை சபாநாயகர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் என். ஆனந்த் ஆகியோர் தலைமையில் காலை 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகப் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துறைவாசி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான எம். ரவிசங்கர் தொகுதிப் பிரச்சினை தொடர்பாக முறையிட வந்த உள்ளூர்வாசி ஒருவரைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான வீடியோ வைரலான விவகாரம் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தவெகவின் தலைமை ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ள சூழலில், இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் சில எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் சமீபகாலமாகத் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்குவது, கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் உள்கட்சிப் பூசல்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்கும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளையும் (Warning), ஒழுங்கு நடவடிக்கைக் கட்டுப்பாடுகளையும் நேரடியாக விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
