LATEST NEWS
ராஜினாமா விவகாரம்: 2 தவெக MLA-க்களுக்கு குவியும் நெருக்கடி.. நாளை முதல் சபாநாயகர் அதிரடி விசாரணை.!!!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் நாளை முதல் 3 நாட்களுக்குத் தீவிர குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார். இந்த விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்களில் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவர் தற்போதைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ.க்களாகப் பொறுப்பில் இருக்கின்றனர். இவர்கள் மீது உரிய தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிமுக தரப்பினர் சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் மேற்கொள்ளும் மூன்று நாள் குறுக்கு விசாரணையானது வரும் நவம்பர் 12ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விசாரணை முடிந்து அனைத்து ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்ட பின்னர், நவம்பர் 12-க்கு பிறகு இந்த இரு தவெக எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை பாயுமா என்ற பலத்த கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சபாநாயகரின் இந்த அதிரடி நகர்வு தற்போதைய அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
