LATEST NEWS
“மாமா அப்பா கொல்ல போறாங்க” கதறியபடி போன் செய்த மூத்த மகள்.. நள்ளிரவில் குடும்பத்தையே அழிக்க முயன்ற தந்தை… அடுத்தடுத்து நடந்த கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில், தொழிலதிபர் ஒருவர் கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாகத் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோசா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை இரவு இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மது போதையில் இருந்த கமலேஷ் என்ற அந்தத் தொழிலதிபர், தனது மனைவி சீமாவைத் (35) தீவிரமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி, தனது 11 வயது இளைய மகள் அஞ்சலியையும் அவர் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றுள்ளார். அப்போது ஆபத்தை உணர்ந்த 16 வயது மூத்த மகள், உடனடியாக ஒரு அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு தனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
அறைக்குள் பூட்டியிருந்த மூத்த மகள், உடனடியாகத் தனது மாமாவிற்குத் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனைவி சீமா உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள இளைய மகள் அஞ்சலியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து எஸ்பி தேவேந்திர சிங் கூறுகையில், தலைமறைவாக முயன்ற குற்றவாளி கமலேஷ் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
