LATEST NEWS
நொடிப்பொழுதில் முடிந்த வாழ்க்கை…! ராயல் என்பீல்டு பைக் மீது மோதி 100 மீட்டர் இழுத்துச் சென்ற லாரி.. தந்தை, மகள் இருவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி..!!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நேரிட்ட மிகக் கொடூரமான சாலை விபத்தில், ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ரவிசங்கர் மற்றும் அவரது மகள் சௌந்தர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரும் தங்களது ராயல் என்பீல்டு பைக்கில் சாலையைக் கடக்க முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தின் கோரத் தாண்டவத்தால், இருசக்கர வாகனம் லாரியின் முன்பகுதியில் சிக்கி சுமார் 100 மீட்டர் தூரத்திற்குச் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் லாரியின் அடியில் சிக்கிய தந்தை, மகள் இருவரின் தலைகளும் சக்கரத்தில் நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் பிரிந்தனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நொடிக் பொழுதில் நிகழ்ந்த இந்த கோர விபத்து, அப்பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், பலியான இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
