“அடப்பாவிகளா.. ரயிலில் கடைசியாக இறங்கிய கணவன் – மனைவி… சந்தேகப்பட்டு பையைத் திறந்த TTE-க்குக் காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவிகளா.. ரயிலில் கடைசியாக இறங்கிய கணவன் – மனைவி… சந்தேகப்பட்டு பையைத் திறந்த TTE-க்குக் காத்திருந்த அதிர்ச்சி.. வைரல் சம்பவம்..!!

Published

on

ரயிலில் பயணம் செய்த கணவன் – மனைவி இருவர், ரயில் நிலையத்திற்கு வந்ததும் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு கடைசியாக இறங்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அந்த நபரின் பையைச் சோதனையிட முடிவு செய்தார். பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான இரண்டு பெட்சீட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியதும், அந்த நபரின் மனைவி பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு,இதுபோன்ற அர்த்தமற்ற விஷயங்களைப் பேச வேண்டாம்” எனக் கோபமாகப் பேசியுள்ளார். இருப்பினும், அங்கேயே பையைத் திறந்து இரண்டு பெட்சீட்களையும் டிக்கெட் பரிசோதகர் திரும்பப் பெற்றுக்கொண்டார். வெறும் 200 அல்லது 300 ரூபாய் மதிப்புள்ள பெட்சீட்டுக்காகத் தங்களது கௌரவத்தையும் மரியாதையையும் இழக்கும் இதுபோன்ற நபர்களை என்ன செய்வது என்றும், அரசாங்கம் எவ்வளவு வசதிகளைச் செய்து கொடுத்தாலும் பொதுமக்களிடம் அடிப்படை ஒழுக்கமும், பொது அறிவும் (Civic Sense) இருக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in