“முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு ஏன்..?” அரசுக்கு ரூ.5.39 கோடி இழப்பு ஏற்படுத்திய பகீர் பின்னணி.. மதுரையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு ஏன்..?” அரசுக்கு ரூ.5.39 கோடி இழப்பு ஏற்படுத்திய பகீர் பின்னணி.. மதுரையில் பரபரப்பு..!!

Published

on

மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி மற்றும் சத்திர வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், முன்னாள் அமைச்சர் பி. மூர்த்தியின் குடும்பத்தினர் பெயரிலும், உரிய அனுமதி இல்லாமல் பினாமி பெயர்களிலும் கல் மற்றும் செம்மண் குவாரிகள் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில், அண்மையில் அந்தப் பகுதிகளில் உள்ள குவாரிகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மற்றும் சோதனை நடத்தினர். அந்த ஆய்வில், அரசு அனுமதிக்கப்பட்ட அளவையும் வரம்புகளையும் மீறி, சட்டவிரோதமாகக் கல் மற்றும் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, வாடிப்பட்டி மற்றும் சத்திர வெள்ளாளப்பட்டி பகுதிகளில் விதிகளை மீறி கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்குச் சுமார் ரூ.5.39 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்கள் (RDO) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தனர். கோட்டாட்சியர்கள் கொடுத்த அந்தப் புகார்களின் அடிப்படையிலேயே, சட்டவிரோத குவாரிகளை நடத்தி வந்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் இல்லம், அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in