LATEST NEWS
“பேச விடாட்டி போராடாம என்ன செய்வாங்க..?!” இபிஎஸ் மைக் கட் செய்யப்பட்டதால் கொதித்தெழுந்து சபாநாயகரை மிரட்டிய அதிமுக.. ஸ்தம்பித்த சட்டசபை..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே ஏற்பட்ட மாறுபட்ட கருத்துகளால் காரசார விவாதம் வெடித்தது. முன்னாள் ஆட்சியின் திட்டங்கள் குறித்த செங்கோட்டையனின் கருத்துக்குப் பதிலடியாக “அன்று அமைச்சர் யார்?” என பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியது, அதிமுக உறுப்பினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி அவையில் பரபரப்பை உண்டாக்கியது.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பேச முயன்றபோது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். “உறுப்பினர்களைப் பேச விடவில்லை என்றால் என்ன செய்வார்கள்?” எனப் பழனிசாமி கொதித்தெழுந்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியதால், அவையில் கடும் அமளி நிலவியது. இந்த மோதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.
