“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” ஓய்வு பெற்ற அதிகாரியின் வக்கிர புத்தி… நள்ளிரவில் அரசு பள்ளி மாணவிகளை ஒப்படைத்த சமையலர்.. சொகுசு பங்களாவில் காத்திருந்த பயங்கரம்.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” ஓய்வு பெற்ற அதிகாரியின் வக்கிர புத்தி… நள்ளிரவில் அரசு பள்ளி மாணவிகளை ஒப்படைத்த சமையலர்.. சொகுசு பங்களாவில் காத்திருந்த பயங்கரம்.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் ஜருகுமல்லி பகுதியில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா அரசுப் பள்ளி மாணவிகளை, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜருகுமல்லி கேஜிபிவி பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளை, அங்கு சமையலராகப் பணியாற்றும் நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ரகசியமாக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று இந்த நபரின் வீட்டில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அந்த நபர் மாணவிகளிடம் அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் நடந்துகொண்டதால், அச்சமடைந்த மாணவிகள் அவரது வீட்டில் இருந்து தப்பியோடி வந்து அப்பகுதி பொதுமக்களிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்துத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தை அறிந்ததுமே ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்களும், அவர்களது உறவினர்களும் மற்றும் உள்ளூர் பொதுமக்களும் திரண்டு வந்து குற்றவாளியின் வீட்டை முற்றுகையிட்டு அதிரடியாகத் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜருகுமல்லி போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்து அந்த நபரை மீட்டனர். விசாரணையில், அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் வெங்கடேஷ் மற்றும் அவருக்குத் துணை நின்ற பள்ளி சமையலர் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in