“நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா…?” ரோஹித்தின் செஞ்சுரி கொண்டாட்டத்தை அப்படியே காப்பி அடித்த ஜெய்டன் சீல்ஸ்..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா…?” ரோஹித்தின் செஞ்சுரி கொண்டாட்டத்தை அப்படியே காப்பி அடித்த ஜெய்டன் சீல்ஸ்..! வைரல் வீடியோ..!!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா, கவுகாத்தியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது 35-வது ஒருநாள் சதத்தை விளாசி அசத்தினார். 405 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் சுப்மன் கில்லுடன் இணைந்து ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஒரு ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா, தமக்கே உரித்தான பாணியில் கிண்டலாக நொண்டி நொண்டி ஓடி தனது சதத்தைக் கொண்டாடினார். இது, தாம் உடற்தகுதியுடன் இல்லை என்று விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது.

இதனிடையே, ரோஹித் சர்மா 101 ரன்கள் எடுத்திருந்தபோது, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் வீசிய பந்து ரோஹித்தின் கால்காப்பில் பட்டது. சீல்ஸ் பலமாக முறையீடு செய்ய, நடுவரும் நீண்ட யோசனைக்குப் பிறகு அவுட் என தீர்ப்பளித்தார். இதன் மூலம் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இடையே நிலவிய 255 ரன்கள் கொண்ட அபாரமான பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஜெய்டன் சீல்ஸ், ரோஹித் சர்மா தனது முடிவை நடுவரிடம் முறையிட்டு டி.ஆர்.எஸ் கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ரோஹித் சர்மா செய்த அதே நொண்டி நொண்டி ஓடும் சதக் கொண்டாட்டத்தை கிண்டலாக செய்து காட்டினார்.

Advertisement

டி.ஆர்.எஸ் மறுஆய்வில் பந்து பேட்டில் படாமல் நேரடியாக விக்கெட்டை தாக்குவது தெளிவாக உறுதியானதால், ரோஹித் சர்மா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி வரிசையில் இணைந்து அவர் எட்டினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in