LATEST NEWS
“உன் உடம்பில் துர்நாற்றம் வீசுகிறது…” வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை வெளியே துரத்திய அரசு மருத்துவமனை ஊழியர்கள்.. நடுரோட்டில் ஏழை பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தின் கியான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில் மனிதநேயமற்ற இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மாவட்டத் தலைமையகம் மற்றும் முதன்மை மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு, பிரசவத்திற்காக வனவாசி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் வந்துள்ளார். ஆனால், அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பெண்ணின் சாதியைக் குறிப்பிட்டுக் கேலி செய்தும், அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறியும் அவரை மருத்துவமனையை விட்டு வெளியே துரத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தப் பெண் மருத்துவமனை வாசலின் வெளியிலேயே கடுமையான பிரசவ வலியால் துடித்துள்ளார். வேறு வழியின்றி, மருத்துவமனைக்கு வெளியேயுள்ள சாலையிலேயே அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் நடந்து குழந்தை பிறந்துள்ளது. இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக தங்களது துணிகள் மற்றும் தாள்களைக் கொண்டு மறைப்பு ஏற்படுத்தி அந்தப் பெண்ணிற்குப் பிரசவம் நடக்க உதவியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட நிர்வாகமும் முதன்மை மருத்துவ அதிகாரியும் தங்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு ரத்த சோகை அதிகமாக இருந்ததாகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு வெறும் 5 கிராம் மட்டுமே இருந்ததால் அவரது ஆபத்தான நிலையைக் கருத்தில் கொண்டு, மேல் சிகிச்சைக்காக வாரணாசியில் உள்ள பிஹெச்யுமருத்துவமனைக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
