CRIME
“ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!” மழையில் தூங்கிய குடும்பம்.. 6 வயது சிறுமியை குறிவைத்து தூக்கிய காமுகன்…. சிசிடிவி-யில் சிக்கிய காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் வராண்டா பகுதியில் தனது பாட்டியுடன் தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி திவ்யா, மர்மமான முறையில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த மழை காரணமாக இந்த ஏழைக் குடும்பத்தினர் தற்காலிகமாக ரயில் நிலைய வளாகத்தில் தங்கியிருந்த போது, செப்டம்பர் 25 அன்று மாலை இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. சிறுமியைக் காணாமல் அவரது தாயார் தேடிய நிலையில், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அச்சிறுமிக்குத் தெரியாமல் ரகசியமாகத் தூக்கிக்கொண்டு ஓடுவது பதிவாகியுள்ளது.
இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் குறித்துப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரசு ரயில்வே போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் 100-க்கும் அதிகமான நபர்களிடம் விசாரணை நடத்தியும் கடத்தப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி குறித்த எந்தவொரு துப்பும் இன்னும் கிடைக்கவில்லை. இதனால், சிசிடிவி காட்சியில் உள்ள இந்தச் சந்தேக நபரைக் கண்டாலோ அல்லது சிறுமி குறித்த ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக அயோத்தி ஜிஆர்பி போலீஸாரை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
