CRIME
“எந்நேரமும் போன் பேசுறா” தினமும் டார்ச்சர் பண்ணுறா.. என் சாவுக்கு அவதான் காரணம்.. தற்கொலைக்கு முன் கணவன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!
கிரேட்டர் நோய்டாவின் பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 25 வயது வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட நபர் கான்பூர் தேஹாத் பகுதியைச் சேர்ந்த அஜய் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆன்லைன் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்த அவர், அங்குள்ள மில்க் லச்சி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
அஜய் சிங் ஓராண்டிற்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது மனைவி உன்னாவ் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன் காரணமாக அஜய் சிங் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக அஜய் சிங் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், தனது மனைவி பிற ஆண்களுடன் தொலைபேசியில் பேசுவது குறித்துக் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தனது மரணத்திற்கு அவரே காரணம் என்றும் அந்த வீடியோவில் அஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பிஸ்ராக் காவல் நிலையப் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மரணம் குறித்து அஜய் சிங்கின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலிபர் தற்கொலைக்கு முன் வெளியிட்ட வைரல் வீடியோ மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
