“SC-ST ஆக்ட் போடுங்க இவன் மேல..” நில அளவையின் போது பிராமண இளைஞரை மிரட்டிய அதிகாரி.. அடுத்த நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“SC-ST ஆக்ட் போடுங்க இவன் மேல..” நில அளவையின் போது பிராமண இளைஞரை மிரட்டிய அதிகாரி.. அடுத்த நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் சகௌரா கிராமத்தில் நிலத்தை அளவிடும் பணியின் போது, கௌரவ் பாண்டே என்ற பிராமண சமூக இளைஞரின் சாதியைக் கேட்டு, அவரை எஸ்சி-எஸ்டி சட்டத்தில் சிக்க வைப்பதாகக் கூறி மிரட்டிய கிராம நிர்வாக அலுவலர் அலோக் திரிபாதியின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம்சாகர் பாசி என்ற பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பட்டா நிலத்தை அளவிட்டு அவரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் சென்றபோது இந்த மோதல் வெடித்தது. தன் குடும்பத்திற்குச் சொந்தமான நிலமும் அங்கு இருப்பதாகக் கூறி முழுமையாக அளக்கக் கோரி கௌரவ் பாண்டே எதிர்ப்பு தெரிவித்த போது இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பிராமண அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லேக்பாலின் இந்த முறையற்ற கருத்து குறித்து விசாரணை நடத்தி இரண்டு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வட்டாட்சியருக்கு ஹர்தோய் சதர் எஸ்டிஎம் மயங்க் குண்டு உத்தரவிட்டுள்ளார். எனினும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள லேக்பால் அலோக் திரிபாதி, பட்டியலினத்தவருக்குச் சொந்தமான நிலத்தை ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மிரட்டல் விடுத்ததாகவும், தான் விதிகளைப் பின்பற்றி இரு தரப்பினரையும் சட்டப்படி செயல்படுமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in