இறந்தும் வாழும் ’கர்ணன்’..!” 1.5 வயதிலேயே 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டுச் சென்ற நெகிழ்ச்சியான அற்புதம்.. தமிழக வரலாற்றிலேயே முதன்முறை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறந்தும் வாழும் ’கர்ணன்’..!” 1.5 வயதிலேயே 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டுச் சென்ற நெகிழ்ச்சியான அற்புதம்.. தமிழக வரலாற்றிலேயே முதன்முறை..!!

Published

on

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைத் தண்டுவட நீர் தேக்கப் பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 19 மாதக் குழந்தை ‘கர்ணன்’ மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவனது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 3 குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்துள்ளன. தமிழக மருத்துவ வரலாற்றிலேயே இவ்வளவு குறைந்த வயதில் ஒரு குழந்தையின் உறுப்புகள் தானம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். தங்களது பிஞ்சுக் குழந்தையின் பிரிவால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்த நிலையிலும், பெற்றோர் காட்டிய இந்த அசாத்திய பெருந்தன்மையும் மனிதநேயமும் பலரது நெஞ்சங்களை நெகிழச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி குழந்தையின் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் வெற்றிகரமாகப் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 குழந்தைகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் சட்டப்பூர்வ மரியாதைகளுடன் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் மருத்துவத்துறை சார்பில் குழந்தையின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலும், மற்ற குழந்தைகளின் சிரிப்பில் தங்கள் குழந்தையைக் காணும் நோக்கில் அவர்கள் செய்த இந்த உன்னதமான தியாகத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in