LATEST NEWS
“இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு..?!” சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் உடைத்த உண்மை..அதிரும் தமிழக அரசியல் களம்..!!
மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என்பது குறித்து கட்சியின் மேலிடம்தான் இறுதி முடிவு செய்யும் என்று கட் அண்ட் கறாராகத் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த அரசியல் கருத்துக்கள் தொடர்பாக ஏதேனும் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால், அதனைப் பத்திரிகையாளர்கள் நேரடியாகச் செங்கோட்டையனிடமே கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணிக்காக முன்பணம் செலுத்தியும், டெல்டா மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து இயக்கப்படவிருந்த சிறப்பு ரயில்களுக்கு ஒன்றிய அரசு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து முடக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், பல்வேறு தடைகளைத் தாண்டித் தொண்டர்கள் டெல்லி பேரணியை வெற்றிகரமாக நடத்துவார்கள் என்று கூறிய அவர், ரேஷன் பொருட்களின் அளவைக் குறைக்கக் கூடாது எனவும், விமான நிலையத் திட்டங்களுக்காக விவசாய நிலங்களைப் பாதிக்காத மாற்று இடங்களை அரசு தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
