CM-க்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும்னு நினச்சேன்… ஆனா அதை செய்யவே மாட்டேங்குறாரே… விஜய்யை மீண்டும் மீண்டும் சீண்டும் உதயநிதி…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CM-க்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும்னு நினச்சேன்… ஆனா அதை செய்யவே மாட்டேங்குறாரே… விஜய்யை மீண்டும் மீண்டும் சீண்டும் உதயநிதி…!!!

Published

on

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் தன்னை மிரட்டுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “மூன்று Files வந்திருக்கிறது; அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்று முதலமைச்சர் மிரட்டல் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால் அந்த ஆவணங்களை உடனடியாகத் திறந்து காட்ட வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் இந்தச் செயல்பாட்டைச் சாடிய உதயநிதி, அவருக்குக் கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் அவர் ஒரு நாளும் கோப்புகளைத் திறந்து பார்க்க மாட்டேங்கிறார் என்றும் விமர்சித்துள்ளார். மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், ஆவணங்களை வெளியிடாமல் மறைப்பதன் மூலம் முதலமைச்சர் தனது பலவீனத்தையே வெளிப்படுத்துகிறார் என்றும் சாடியுள்ளார்.

Advertisement

எனவே, தம்மிடம் உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட முதலமைச்சர் முன்வர வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in